செய்திகள்
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-24 09:44 GMT   |   Update On 2021-09-24 09:44 GMT
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பல்லடம்:
 
பல்லடத்தில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் தற்போது வரை அந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. ரத்து செய்யும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லடம் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். 

பொருளாளர் கார்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யு. பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணசாமி வரவேற்றார். 

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சின்னக்கண்ணன், ராஜசேகர், பரமசிவம், கந்தசாமி, சக்திவேல் உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News