செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

பட்டாசு வெடிக்காதீர்கள்: ஆம் ஆத்மி தொடண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அன்பு கட்டளை

Published On 2020-02-10 15:43 GMT   |   Update On 2020-02-10 15:43 GMT
வெற்றி மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து வெளிப்படுத்த வேண்டாம் என ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டசபை தேர்தல் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் ஆம் ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பொதுவாக ஒரு கட்சி வெற்றி பெற்றதும் அந்த கட்சியின் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அதை கொண்டாடுவார்கள். டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது பா.ஜனா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவியது.
Tags:    

Similar News