செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி தரையில் அமர்ந்து இருந்த காட்சி.

ஊராட்சி மன்றத்தலைவியை தரையில் அமரவைத்த விவகாரம் - கனிமொழி கண்டனம்

Published On 2020-10-10 13:29 GMT   |   Update On 2020-10-10 13:29 GMT
பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி தரையில் அமர வைக்கப்பட்டதை திமுக எம்.பி கனிமொழி கண்டித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். ராஜேஸ்வரியை மற்ற உறுப்பினர்கள் மதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் உச்சமாக, ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது பிற உறுப்பினர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விமான நிலையத்திலிந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழி, இந்த விவகாரம் குறித்து பேசுகையில், இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று என்றார்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்று கூறிய அவர், தமிழக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜாதி என்பது மிகப் பெரிய முட்டாள்தனம் என மனிதர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியான  மனப்பான்மையை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
Tags:    

Similar News