ஆட்டோமொபைல்
எம்ஜி ஆஸ்டர்

20 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த எம்ஜி ஆஸ்டர்

Published On 2021-10-21 12:55 GMT   |   Update On 2021-10-21 12:55 GMT
எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன.


எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய எம்ஜி ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. முன்பதிவு  துவங்கிய 20 நிமிடங்களில் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் விலை ரூ. 9.78 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17.38 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய எம்ஜி ஆஸ்டர் மாடலில் டூயல்டோன் டேஷ்போர்டு, பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏ.ஐ. பெர்சனல் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. 6 ஏர்பேக் கொண்டிருக்கும் ஆஸ்டர் மாடலில் இ.எஸ்.சி., ஏ.பி.எஸ்., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், 4 டிஸ்க் பிரேக், பார்கிங் சென்சார்கள், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், செக்யூரிட்டி அலாரம் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.



எம்ஜி ஆஸ்டர் மாடல் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கும் 1.3 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News