உள்ளூர் செய்திகள்
உலக சாதனை நிறுவன நிர்வாகிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்த காட்சி.

அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் 2,600 மணி நேர பன்னாட்டு சங்கமம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டு

Published On 2022-01-12 04:45 GMT   |   Update On 2022-01-12 04:45 GMT
அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் 2,600 மணி நேர பன்னாட்டு சங்கம நிர்வாகிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி:

அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தின் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் 2 ஆயிரத்து 600 மணி நேர  பன்னாட்டு சங்கமம் நிகழ்ச்சி இணையவழியில் நடத்தப்பட்டது.

இளைஞர்கள், மாண வர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90&வது  பிறந்தநாளை  மையமாக வைத்து இந்நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. 

அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்தோடு, தமிழக ஆசிரியர் கல்வியியல்  பல்கலைக்கழகம், சர்வதேச வர்த்தக, கலாச்சார வளர்ச்சி பேரவை,  ராமேஸ்வரம் கலாம் அறக்கட்டளை, இந்தியா பிரைட் புக் ஆப்  ரெக்கார்ட்ஸ்,  வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கம், சார்ஜா பிரெயன் ஓ பிரெய்ன்   இன்டர்நேஷனல், கனடா நாட்டு பெண்கள் கூட்டமைப்பு, புதுவை  தி சென் அகாடமி, கவிதை வானில் கவிமன்றம், போஸ்டர்ஸ் அகாடமி, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை  உள்பட பல  நிறுவனங்கள் பங்கேற்றன. 

நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் இணைவழியில் பங்கேற்று கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இது பொதுமக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

பன்னாட்டு  சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய அசிஸ்ட் உலக சாதனை நிறுவன தலைவர்  ராஜேந்திரன்,  முகைதீன், கவிதா செந்தில்நாதன், கலாவிசு, பிரியா கார்த்திக், குழு ஒருங்கிணைப்பாளர்கள் இசையமைப்பாளர்  தேவ் குரு, ராமச்சந்திரன், அருண்தாமஸ், தேசிய விருதாளர் மணி மாறன் ஆகியோரை முதல்-அமைச்சர் ரங்கசாமி, துணை சபாநாயகர்  ராஜ வேலு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News