உள்ளூர் செய்திகள்
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியை பாளையங்கோட்டை பிஷப் அந்தோணி சாமி அடிகளார் ஏற்றினார்.

பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா

Published On 2022-05-07 09:45 GMT   |   Update On 2022-05-07 09:45 GMT
பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 14ம்தேதி தேர்பவனி நடைபெறுகிறது.
பூதலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூண்டி மாதா பேராலயத்தில் முகப்பிலிருந்து பூண்டி மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்ட சப்பரத்தை பக்தர்கள் சுமந்துவந்தனர்.

அதனுடன் இணைந்து கொடியையும் பக்தர்கள் பிடித்து ஊர்வலமாக வந்தனர். கொடிஊர்வலம் கொடி மேடையை வந்தடைந்ததும் பாளைய ங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை பிஷப் அந்தோணி சாமி தலைமை வகித்து மரியா-வாழும் கடவுளின் ஆலயம் என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றினார்.திருப்பலியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவிப் பங்குத் தந்தையர்கள் இனிகோ ஜான்சன், ஆன்மிக தந்தை அருளாநந்தம், மற்றும் அருட்தந்தை யர்கள் கலந்து கொண்டனர்.

நவ நாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும். இன்று மாலை காட்டூர்பு னிதஅந்தோணியார் ஆலய சேகர்செபஸ்டின் மரியா-இறை வார்த்தைகளை வாழ்வாக்கியவர் என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.நாளை ஞாயிற்றுக்கிழமை மரியா- துன்பத்தில் துணை நிற்பவர் என்ற தலைப்பில் எம்மாவூஸ் ஆன்மிக மைய இணை இயக்குனர் மரியடெல்லஸ் திருபலிநிறைவேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனி மற்றும் திருப்பலி நடைபெறும்.

பூண்டி மாதா பேராலய திருவிழா நாளான வரும் 14ம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தின் அருட்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோரதுநினைவு திருப்பலி நிறை வேற்ற ப்படும். மாலை திருவிழா திருப்பலிகும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலை மையில் மரியா-விசுவாசத்தி ன்மாதிரிஎன்றதலைப்பில் நடைபெறும்

இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும, வண்ண வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் பெரிய தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு வாணவேடிக்கை முழங்க தேர்பவனி நடைபெறும். தேர்பவனி நிறைவடைந்ததும் வரும் 15ம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி நிறைவேற்றுவார்.

அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறும். பேராலய திருவிழாவையொட்டி பேராலய வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திரண்டு கொடியேற்றத்தை வணங்கினர். திருவிழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான அருட்தந்தையர்கள் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News