வழிபாடு
சாமிகள் காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளியதையும் பக்தர்கள் புனித நீராடியதையும் படத்தில் காணலாம்.

குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்

Published On 2021-12-13 05:03 GMT   |   Update On 2021-12-13 05:03 GMT
குத்தாலம் காவிரி படித்துறையில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திக்கை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி குத்தாலம் சோழீஸ்வரர் கோவில், மன்மதீஸ்வரர் கோவில், ஆதிகேசவபெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக வந்து காவிரி தீர்த்த படித்துறையில் எழுந்தருளினர்.

இதை தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

கடைஞாயிறு தீர்த்தவாரியையொட்டி குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குத்தாலம் பகுதியில் 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
Tags:    

Similar News