தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10 லீக்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 சீரிஸ் புகைப்படங்கள்

Published On 2019-07-27 06:50 GMT   |   Update On 2019-07-27 06:50 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்றும் இதன் முக்கிய சிறப்பம்சங்களும் இணையத்தில் வெளியாகிவிட்டன.

தற்சமயம் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் புகைப்படங்கள் புதிய நிறத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் எஸ் பென் சாதனத்துடன் ஔரா குளோ நிற வேரியண்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய நோட் சீரிஸ் புளு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் QHD+  ரெசல்யூஷன் கொண்ட 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் QHD+ 6.8 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், இந்தியாவில் இந்த மாடலில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படலாம்.



இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி. ரேம், 256 ஜி.பி. UFS 3.0 மெமரி வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புதிய எஸ் பென் ஏர் ஆக்‌ஷன் ஜெஸ்ட்யூர் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை தொடாமலேயே சில அம்சங்களை இயக்க முடியும். கேலக்ஸி நோட் 10 சாதனங்களில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் கூடுதலாக ToF சென்சார் வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: IshanAgarwal24
Tags:    

Similar News