ஆன்மிகம்
அய்யனார்

வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா

Published On 2020-10-17 06:34 GMT   |   Update On 2020-10-17 06:34 GMT
வாடிப்பட்டி அருகே நீரேத்தான், மேட்டுநீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அய்யனாருக்கு சந்தனகாப்புடன் கூடிய ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி அருகே நீரேத்தான், மேட்டுநீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோவிலில் திருவிழா நேற்று நடந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அரசு வழிகாட்டும் முறைப்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அய்யனாருக்கு சந்தனகாப்புடன் கூடிய ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் 2-ம் நாளில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி இல்லாததால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அவரவர் வீட்டில் மாட்டிற்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வந்த இதுபோன்ற திருவிழாக்கள் கொரோனா தொற்றினால் தடைபட்டது பொதுமக்களுக்கு வேதனை அளித்தது.
Tags:    

Similar News