தொழில்நுட்பச் செய்திகள்
6ஜி

6ஜி தொழில்நுட்பத்திற்கு செயல்விளக்கம் கொடுத்த எல்.ஜி.

Published On 2021-12-22 09:58 GMT   |   Update On 2021-12-22 09:58 GMT
எல்.ஜி. நிறுவனம் 6ஜி வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிசப்ஷன் சார்ந்து மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வெளியிட்டு உள்ளது.


எல்.ஜி. நிறுவனம் 2021 கொரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொருட்காட்சியில் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்வு டிசம்பர் 22 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24 வரை நடைபெறுகிறது. இதில் எல்.ஜி. நிறுவனம் 6ஜி வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிசப்ஷன் பிரிவில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்களை வெளியிட்டது.

இந்த நிகழ்வில் எல்.ஜி. நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோஃபர் ஆய்வு மையத்துடன் இணைந்து உருவாக்கிய 6ஜி-க்கான பவர் ஆம்ப்லிஃபையரை வெளியிடுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த பவர் ஆம்ப்லிஃபையர் கொண்டு எல்.ஜி. நிறுவனம் 6ஜி டெராஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் வயர்லெஸ் டேட்டாவை வெற்றிகரமாக டிரான்ஸ்மிட் செய்துகாட்டியது.



டெராஹெர்ட்ஸ் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் / ரிசப்ஷன் தொழில்நுட்பம் 100 ஜிகாஹெர்ட்ஸ் துவங்கி 10 டெராஹெர்ட்ஸ் வரையிலான பிரீக்வன்சி பேண்ட்களை பயன்படுத்துகிறது. இவை நொடிக்கு 1 டெராபிட் வேகத்தை வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.

இத்துடன் ஃபுல் டுப்லெக்ஸ் தொழில்நுட்பத்தை எல்.ஜி. அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஒரே பிரீக்வன்சி பேண்ட் பயன்படுத்தி தகவல்களை அனுப்பவும், பெறவும் செய்கிறது. 2029 வாக்கில் 6ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இதற்கென 2019 ஆம் ஆண்டு எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. கே.ஏ.ஐ.எஸ்.டி. 6ஜி ஆய்வு மையத்தை அமைத்தது.
Tags:    

Similar News