செய்திகள்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

கரூர் பகுதியில் குளம் தூர்வாரும் பணிகள்: எம்ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Published On 2019-09-05 16:26 GMT   |   Update On 2019-09-05 16:26 GMT
கரூர் பகுதியில் ரூ.3 கோடி செலவில் குளம் தூர்வாரும் பணிகளை போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்:

தமிழக முதல்வரின் குடி மராமத்து திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கரூர் ஊராட்சி ஒன்றியம் மண்மங்கலம் ஊராட்சி தண்ணீர் பந்தல்பாளையம் குளம் ரூ.1 கோடியே 84 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமையேற்றார். 

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்   திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார். மேலும் வாங்கல் குப்பிச்சிபாளையம் ஊராட்சி கருப்பம்பாளையம் குளம் ரூ. 95 ஆயிரம் மதிப்பிலும், பஞ்சமாதேவி ஊராட்சி சீத்த காட்டூர்குளம் ரூ. 42 ஆயி ரம் மதிப்பிலும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த 3 குளங்களும் மொத்தம் ரூ.3 கோடியே 21 லட்சம்  செலவில் தூர்வாரப்பட உள்ளது. 

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி கலெக்டர்சந்தியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகர், மண்மங்கலம் தாசில்தார் ரவிக்குமார், திருவிகா, ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News