வழிபாடு
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2022-04-01 09:03 GMT   |   Update On 2022-04-01 09:03 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரமோற்சவ விழா கடந்த மாதம் 11-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 6.20 மணியளவில் அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News