தொழில்நுட்பம்
எம்ஐ பேண்ட் 4சி

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட சியோமி பிட்னஸ் பேண்ட் அறிமுகம்

Published On 2020-07-17 11:48 GMT   |   Update On 2020-07-17 11:48 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேண்ட் 4சி பிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனம் எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகம் செய்தது. இது ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் ஆகும்.

புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடலில் 1.08 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட கலர் டச் டிஸ்ப்ளே, பில்ட் இன் சார்சிங் போர்ட், அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.



சியோமி எம்ஐ பேண்ட் 4சி சிறப்பம்சங்கள்

- 1.08 இன்ச் 128x220 பிக்சல் எல்சிடி கலர் டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 5.0
- நேரம், இதய துடிப்பு விவரங்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது
- 24/7 இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி
- உறக்கத்தை டிராக் செய்யும் வசதி
- செடன்ட்டரி ரிமைன்டர்
- 5 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- 13 கிராம் மிக குறைந்த எடை
- 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 130 எம்ஏஹெச் பேட்டரி

சியோமி எம்ஐ பேண்ட் 4சி மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பிளாக், ஆரஞ்சு, கிரீன் மற்றும் புளூ நிற ஸ்டிராப்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை 16.7 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1260 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News