செய்திகள்
திஷா ரவி

விசாரணை விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது- டெல்லி ஐகோர்ட்டில் திஷா ரவி மனு

Published On 2021-02-18 06:28 GMT   |   Update On 2021-02-18 06:28 GMT
விசாரணை விவரங்களை ஊடகம் உள்ளிட்ட மூன்றாம் நபருக்கு கசியவிடக்கூடாது என டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி திஷா ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், செயல்திட்டம் தொடர்பாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை (டூல்கிட்) பகிர்ந்தார். கிரேட்டா தன்பெர்க்கின் இந்த டூல்கிட்டை, பெங்களூருவை சேர்ந்த மாணவி திஷா ரவி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். சூழலியல் ஆர்வலரான அவர், ஒரு போராட்டக்குழு சார்பில் இதனை பதிவு செய்திருந்தார். 

இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையை தூண்டிவிடுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட திஷா ரவி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட விசாரணை விவரங்களை, ஊடகம் உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் நபருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும், என கூறி உள்ளார்.
Tags:    

Similar News