தொழில்நுட்பம்
லெனோவோ லீஜியன்

144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் பாப் அப் கேமரா கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்

Published On 2020-05-06 07:33 GMT   |   Update On 2020-05-06 07:33 GMT
144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் பாப் அப் கேமரா கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன்  லீஜியன் பிராண்டிங்கின் கீழ் வெளியாக இருக்கிறது. 

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், கேமிங் சார்ந்த பிரச்சனையை தீர்க்க இரண்டு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை ஸ்மார்ட்போனின் இருபுறங்களில் ஏற்படும் வெப்பநிலையை சரிசெய்ய உதவும் என கூறப்படுகிறது.

கேமிங்கின் போது சார்ஜிங் வேகம் குறைக்கப்பட்டு இருப்பதாக லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 90 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இரண்டாவது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 



பயனர்கள் கேமிங்கின் போதும் சுலபமாக சார்ஜ் செய்யவே இரண்டாவது சார்ஜிங் போர்ட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் கேம் பேட்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை லெனோவோ அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனுடன் ப்ரோடெக்டிவ் கேஸ் ஒன்றும் வழங்கப்படலாம்.

லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதுமானதாக இருக்கும் என லெனோவோ தெரிவித்துள்ளது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். இதன் பாப்-அப் கேமரா மாட்யூல் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் காணப்படுகிறது.
Tags:    

Similar News