ஆன்மிகம்
காளி வழிபாடு

முன்னோர்கள் சாபத்தை போக்கும் காளி வழிபாடு

Published On 2020-08-07 06:02 GMT   |   Update On 2020-08-07 06:02 GMT
ஒருவருடைய வாழ்வில் அடிக்கடி சிரமத்தையும் தடையையும் சந்தித்தால் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து தடை, தாமதத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடையலாம்.
முன்னோர்களின் சாபம் போன்ற கெடுதல்கள் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்த தலைமுறைகளை பாதிக்கும். ஒருசிலர் வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். குழந்தைகள் வாழ்வில் உயர்வு கிட்டாது. இதற்கெல்லாம் காரணம் முன்னோர்கள் சாபம் என்பதை அறியலாம்.
ஒருவருடைய வாழ்வில் அடிக்கடி சிரமத்தையும் தடையையும் சந்தித்தால் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து தடை, தாமதத்திலிருந்து விடுபட்டு வெற்றி  அடையலாம்.
 
நமது வாழ்வில் சாபம் இடுவதோ மற்றவர்களுக்கு துரோகம் செய்வதோ இல்லாமல் வாழ வேண்டும். நமக்கு மேலே ஒரு சக்தி நம்மைக் கண்காணிக்கிறது  என்பதை உணர்ந்து, நம் எதிர்கால சந்ததியர் நல்ல வாழ்வு வாழ வேண்டு என்று சிந்தித்து மற்றவர்களுக்கு சாபம் கொடுக்காமல் வாழ்ந்தால் நல்லது.
 
மனித வாழ்வில் சாபங்களைப் போக்கக் கூடிய சக்தியாக விளங்கும் தெய்வம் காளி. எனவே தடை தாமதங்களைச் சந்திப்பவர்கள் தங்கள் அருகில் உள்ள காளி கோவிலுக்கு வெள்ளிக்கிழமையில் தேங்காய், பழம், கொண்டு சென்றாலே போதும். காளி தடைப்பட்டு வரும் காரியங்களைச் சிறப்பாக்கி கொடுப்பாள்.
Tags:    

Similar News