செய்திகள்
தீபாவளி பட்டாசு தீ விபத்து

தீபாவளி பண்டிகை பட்டாசு தீ விபத்தினால் 75 பேர் காயம்

Published On 2019-10-28 10:44 GMT   |   Update On 2019-10-28 10:44 GMT
தீபாவளி பண்டிகை பட்டாசு தீ விபத்தால் 75க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர்.

சென்னை:

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்தல் மற்றும் ராக்கெட் பட்டாசு மூலம் சென்னையில் பல்வேறு சிறுசிறு தீ விபத்துக்கள் நடந்துள்ளன. நேற்று தீபாவளி தினத்தில் மட்டும் 27 தீ விபத்து நடந்துள்ளன.

பட்டாசு வெடித்து தீப்பொறி விழுந்ததில் மேற்கூரை மற்றும் வீடுகளில் லேசான தீ விபத்து 27 இடங்களில் நடந்துள்ளது.

பட்டாசு தீ விபத்தால் 75க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர். தீக் காயம் பெரிதாக இருப்ப வர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு பட்டாசு தீ விபத்தில் பாதிக்கப்படுவோருக்காக சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டிருந் தது. அதில் காயம் அடைந்த வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் (26-ந்தேதி) பட்டாசு வெடித்து 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அதில் 8 பேர் சிகிச்சை பெற்று உடனடியாக வீடு திரும்பினர். 2 பேர் மட்டும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் பட்டாசு தீ விபத்து மற்றும் தீக்காயம் குறைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பட்டாசு விபத்து குறைந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News