செய்திகள்

கவுரி லங்கேஷ் படுகொலை - மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு அறிக்கை அனுப்பியது

Published On 2017-09-09 07:29 GMT   |   Update On 2017-09-09 08:12 GMT
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்த அறிக்கையை கர்நாடக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று அனுப்பி வைத்தது.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த மூத்த பெண் பத்திரிக்கையாளரான கவுரிலங்கேஷ் (வயது55) கடந்த 5-ம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்த அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறு கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை குறித்த அறிக்கையை கர்நாடக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளது. அம்மாநில தலைமை செயலாளர் அனுப்பிய இந்த அறிக்கையில் கவுரி கொலை குறித்த விவரங்கள் மற்றும் போலீசாரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவுரி கொலை வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News