இந்தியா
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச தேர்தல்: யோகி ஆதித்யநாத் அயோத்தியில் போட்டியிட திட்டம்?

Published On 2022-01-12 13:30 GMT   |   Update On 2022-01-12 13:30 GMT
உத்தரப்பிரதேசம் தேர்தல் தொடர்பாக பாஜகவின் மையக்குழு 10 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஐந்து பாஜக எம்.எல்.ஏக்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் தேர்தல் தொடர்பாக பாஜக கட்சியின் மையக்குழு, 10 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, துறை வாரியாக ஆய்வு செய்துள்ளார். 

மேலும் மாநிலத்தின் உண்மை நிலை குறித்து பிராந்திய செயலாளர்களிடம் கேட்டறிந்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் யோகி ஆதித்யநாத்தை அயோத்தியில் இருந்து போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News