லைஃப்ஸ்டைல்
ஆசனவாயில் அரிப்பு தொல்லையா?

ஆசனவாயில் அரிப்பு தொல்லையா? அப்ப இத செய்யுங்க

Published On 2020-01-24 07:36 GMT   |   Update On 2020-01-24 07:36 GMT
ஆசன வாயில் ஏற்படும் கடுமையான எரிச்சல் மற்றும் குடைச்சலை நாம் சமையல் அறையில் உபயோகபடுத்தும் பொருள்களை கொண்டே குணப்படுத்தலாம். இந்த பொருள்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆசனவாயில் குடைச்சல் அல்லது எரிச்சல் ஏற்பட்டால் நாம் யாரிடமும் கூறாமல் மறைத்து தான் வைத்திருப்போம். இது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும். வெட்கத்தினாலேயே மருத்துவரிடம் கூட பலர் செல்லமாட்டார்கள். ஆனால் ஆசன வாயில் ஏற்படும் கடுமையான எரிச்சல் மற்றும் குடைச்சலை நாம் சமையல் அறையில் உபயோகபடுத்தும் பொருள்களை கொண்டே குணப்படுத்தலாம். இந்த பொருள்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

* 5 பூண்டு பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்நீரால் ஆசன வாய் பகுதியைக் கழுவுங்கள். இப்படி கழுவி வர அரிப்பு அகலும்.

* புடலங்காய் தோல், விதை மற்றும் வெண்டைகாய் ஆகிய காய்கறிகளை வேக வைத்து பொரியல் செய்து சாப்பிட்டால் அரிப்பு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

* உருளைக்கிழங்கை வெட்டி, அதன் துண்டுகளை ஆசன வாயில் சிறிது நேரம் தேய்த்து உலர வைத்தால், நல்ல பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கும் மூல நோயால் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும்.

* ஆசன வாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்க சீமைச்சாமந்தி உதவும். அதற்கு சீமைச்சாமந்தியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்நீரைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியைத் துடைத்து எடுக்க வேண்டும்.



* மூல நோய் இருப்பவர்களின் ஆசன வாய் மிகவும் வறட்சியுடன் இருந்தால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். ஆனால் வைட்டமின் ஈ எண்ணெயை ஆசன வாய் பகுதியில் தடவினால், வறட்சி குறைவதோடு, மூல நோயும் விரைவில் குணமாகும்.

* விளக்கெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் டீட்ரீ ஆயில் சேர்த்து கலந்து ஆசன வாயில் காட்டன் பயன்படுத்தி தேய்த்தால், எரிச்சல் மற்றும் குடைச்சலைத் தரும் வீக்கம் குறையும்.

* ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, ஆசன வாய் பகுதியில் தடவினால், எரிச்சல் மற்றும் குடைச்சலில் இருந்து விடுபடலாம்.

* கற்றாழையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் குடைச்சலைத் தடுக்கும் பண்புகள் உள்ளது. எனவே ஆசன வாயில் எரிச்சல் அல்லது குடைச்சல் அதிகமாக இருந்தால், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Tags:    

Similar News