செய்திகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் போட்டி: அலஸ்டைர் குக் சாதனையை முறியடித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

Published On 2021-06-10 10:17 GMT   |   Update On 2021-06-10 10:17 GMT
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் குக்கிடம் இருந்து பறித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அலஸ்டைர் குக். கடந்த உள்ளூர் சீசனில் இந்தியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய பின்னர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்திருந்த அலஸ்டைர் குக், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் (161) போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு 162-வது போட்டியாகும். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற அலஸ்டைர் குக் சாதனையை முறியடித்துள்ளார்.



சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்டிலும், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலா 168 போட்டிகளிலும், கல்லீஸ் 165 போட்டிகளிலும், சந்தர்பால் 164 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
Tags:    

Similar News