தொழில்நுட்பம்
மோட்டோரோலா

விரைவில் இந்தியா வரும் மோட்டோ டேப்லெட்

Published On 2021-09-18 05:22 GMT   |   Update On 2021-09-18 05:22 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டேப்லெட் மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய மோட்டோ டேப்லெட் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலாவின் முதல் டேப்லெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டேப்லெட் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 



மேலும் இது ரி-பிராண்டு செய்யப்பட்ட லெனோவோ டேப்லெட் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் 10.3 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். 
Tags:    

Similar News