செய்திகள்
ஜோகோவிச்

டென்னிஸ் தரவரிசையில் 300 வாரங்கள் முதல் இடம்: ஜோகோவிச் சாதனை

Published On 2020-12-21 13:12 GMT   |   Update On 2020-12-21 13:12 GMT
டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் 300 வாரங்கள் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராக செர்பியாவின் நோவக் ஜோகோவிச் திகழ்ந்து வருகிறார். இவர் நேற்றைய டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதன்மூலம் 300 வாரங்கள் தரவரிசையில் இருந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரர் 310 வாரங்கள் முதல் இடத்தில் இருந்துள்ளார். ஜோகோவிச் இன்னும் 10 வாரங்கள் இருந்தால் பெடரர் சாதனையை சமன் செய்வார்.

33 வயதாகும் ஜோகோவிச் முதன்முறையாக 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி முதன்முறையாக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார். அதன்பின் ஐந்தாவது முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். 2011 ஜூலை 4-ந்தேதியில் இருந்து 2012 ஜூலை 8-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார்.

அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து 2012-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து. 2013-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி வரை முதல் இடத்தில் நீடித்தார்.

அதன்பின் 2014-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதியில் இருந்து நவம்பர் 6-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார். அதன்பின் 2018-ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதியில் இருந்து 2019 நவம்பர் 3-ந்தேதி வரை முதல் இடத்தில் இருந்தார்.

ரோஜர் பெடரர் தொடர்ந்து 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News