செய்திகள்
கண்ணி வெடி தாக்குதலுக்குள்ளான பஸ்

மாலியில் பஸ் பயணிகளை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்: 14 பேர் பலி

Published On 2019-09-04 17:02 GMT   |   Update On 2019-09-04 17:02 GMT
மாலி நாட்டில் பஸ் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பமகோ:

மாலி ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று. இங்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது 

தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் ஹாவோ பகுதியில் இருந்து மோப்தி நகர் நோக்கி 60 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அச்சாலையில் 

மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி சரியாக பஸ் சாலையை கடக்கும் போது திடீரென வெடித்தது.

இந்த கண்ணிவெடி தாக்குதலில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடம் விரைந்து வந்த மீட்புக்குழுனர் 

காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் பொறுபேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News