ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2020-11-02 07:01 GMT   |   Update On 2020-11-02 07:01 GMT
முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமான நாட்களை காட்டிலும் வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கார், வேன், பஸ்களில் அதிக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வழக்கமான நாட்களை காட்டிலும் வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

அதன்படி நேற்று அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்தநிலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள பஸ்நிலையங்களில் நிறுத்தினர். வாகனங்களின் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
Tags:    

Similar News