செய்திகள்
கொரோனா பலி

கர்நாடகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது

Published On 2021-06-22 03:47 GMT   |   Update On 2021-06-22 03:47 GMT
கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 731 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 4 ஆயிரத்து 867 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெங்களூரு

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 731 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 4 ஆயிரத்து 867 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்து 11 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 142 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 25 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 8,404 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதன் மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 54 ஆயிரத்து 139 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 134 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக பெங்களூருவில் 1,034 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டையில் 23 பேரும், பல்லாரியில் 106 பேரும், பெலகாவியில் 93 பேரும், பெங்களூரு புறநகரில் 134 பேரும், பீதரில் 12 பேரும், சாம்ராஜ்நகரில் 109 பேரும், சிக்பள்ளாப்பூரில் 128 பேரும், சிக்கமகளூருவில் 152 பேரும், சித்ரதுர்காவில் 138 பேரும், தட்சிண கன்னடாவில் 542 பேரும், தாவணகெரேயில் 176 பேரும், தார்வாரில் 55 பேரும், கதக்கில் 17 பேரும் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டார்கள்.

ஹாசனில் 364 பேரும், ஹாவேரியில் 18 பேரும், கலபுரகியில் 26 பேரும், குடகில் 206 பேரும், கோலாரில் 90 பேரும், கொப்பலில் 26 பேரும், மண்டியாவில் 154 பேரும், மைசூருவில் 546 பேரும், ராய்ச்சூரில் 20 பேரும், ராமநகரில் 21 பேரும், சிவமொக்காவில் 217 பேரும், துமகூருவில் 182 பேரும், உடுப்பியில் 117 பேரும், உத்தர கன்னடாவில் 119 பேரும், விஜயாப்புராவில் 34 பேரும், யாதகிரியில் 8 பேரும்
கொரோனா
வுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல்லாரியில் 12 பேர், பெலகாவியில் ஒருவர், பெங்களூரு புறநகரில் 4 பேர், பெங்களூரு நகரில் 28 பேர், பீதர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூரில் தலா ஒருவர், சிக்கமகளூருவில் 3 பேர், தட்சிண கன்னடாவில் 14 பேர், தாவணகெரேயில் 7 பேர், தார்வாரில் 8 பேர், கதக்கில் ஒருவர், ஹாசனில் 3 பேர், ஹாவேரியில் 5 பேர், குடகில் 2 பேர், கோலாரில் 4 பேர், கொப்பலில் 3 பேர், மண்டியாவில் 2 பேர், மைசூருவில் 22 பேர் கொரோனாவுக்கு இறந்தனர்.

ராய்ச்சூரில் 2 பேர், ராமநகரில் 3 பேர், சிவமொக்காவில் 5 பேர், துமகூருவில் 3 பேர், உடுப்பியில் ஒருவர், உத்தர கன்னடாவில் 5 பேர், விஜயாப்புராவில் ஒருவர் இறந்தனர். பாகல்கோட்டை, சித்ரதுர்கா, கலபுரகி, யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News