செய்திகள்
ரெயில்

வருகிற 30-ந்தேதி முதல் கோவை-சென்னை சிறப்பு ரெயில்கள் நேரம் மாற்றம்

Published On 2020-11-25 07:59 GMT   |   Update On 2020-11-25 07:59 GMT
கோவை- சென்னை சிறப்பு ரெயில்களின் நேரம் வருகிற 30-ந்தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை:

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை- மேட்டுப்பாளையம் அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்02671) தினமும் சென்னையில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணியளவில் மேட்டுப்பாளையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடைகிறது.

அதேபோல் சென்னையில் இருந்து தினமும் 10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்02673) மறுநாள் காலை 6 மணிக்கு கோவை வந்தடையும். கோவையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்02674) மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னையை சென்றடையும்.

இந்த நிலையில் இந்த சிறப்பு ரெயில்களின் நேரம் வருகிற 30-ந் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை- மேட்டுப்பாளையம் அதிவிரைவு சிறப்பு ரெயில் எண்(02671) சென்னையில் தினமும் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15-க்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு இரவு 7.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்02672) வருகிற 30-ந் தேதி முதல் இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

சென்னை- கோவை அதிவிரைவு சிறப்பு ரெயில்(எண்02673) வழக்கம்போல இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவையை வந்தடையும்.

கோவையில் இருந்து சென்னைக்கு இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வந்த அதிவிரைவு சிறப்பு ரெயில்(02674) 30-ந் தேதியில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News