செய்திகள்
ஆரணியில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டு சேலையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்ட காட்சி.

ஆரணியில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டுச்சேலை

Published On 2021-02-20 09:26 GMT   |   Update On 2021-02-20 09:26 GMT
தேர்தல் விழிப்புணர்வு பட்டுச்சேலை வடிவமைப்பில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்திற்கு, நெசவாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
ஆரணி:

தமிழகத்தில் பாரம்பரியமிக்க கைத்தறி பட்டு சேலைகள் உற்பத்தியில், ஆரணி சிறப்பிடம் பெற்று வருகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் பொறித்த பட்டுச்சேலையை வடிவமைக்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சீனிவாசன் மேற்பார்வையில் அத்திமலைப்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ‌ஷங்கரி பாலச்சந்திரன் மற்றும் நெசவாளர்கள் பெருமாள், குமார், வெங்கடேசன், வடிவமைப்பாளர் பிரபு ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பட்டு சேலையை தயாரித்துள்ளனர்.

தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு நோக்கில் தயாரித்த பட்டுச்சேலையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கூட்டுறவு சங்கத் தலைவர் ‌ஷங்கரி பாலச்சந்தர், மேலாளர் கணேசன் மற்றும் நெசவாளர்கள் காண்பித்தனர்.

அப்போது தேர்தல் விழிப்புணர்வு பட்டுச்சேலை வடிவமைப்பில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்திற்கு, நெசவாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அந்த பட்டுச்சேலையை கூட்டுறவு சங்கத்தின் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News