தொழில்நுட்பம்
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ

மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் 2nd Gen ஏர்பாட்ஸ் ப்ரோ

Published On 2021-05-29 06:17 GMT   |   Update On 2021-05-29 06:17 GMT
ஆப்பிள் நிறுவனம் 2nd Gen ஏர்பாட்ஸ் ப்ரோ ஹெட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி லெவல் ஏர்பாட்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்பாட்ஸ் மாடல் முதல் முறையாக அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த வேரியண்ட் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முற்றிலும் புது கேஸ்,  சிறிய ஸ்டெம் கொண்டிருக்கும் ன கூறப்படுகிறது.



2022 ஆண்டு வெளியாக இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் மேம்பட்ட மோஷன் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேம்பட்ட ஏர்பாட்ஸ் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

ஆப்பிள் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவு விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை அப்டேட் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News