செய்திகள்
சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி உள்ள கொள்ளையர்களின் உருவம்.

திருப்பூர் அருகே செல்போன் கடைக்குள் புகுந்துரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு - கேமராவில் பதிவான கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

Published On 2021-09-21 10:28 GMT   |   Update On 2021-09-21 10:28 GMT
இன்று காலை சென்று பார்த்த போது கடையில் இருந்த 10 ஆன்டிராய்டு செல்போன்கள், லேப் டாப், பழைய போன்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது 23) . இவர் அதே பகுதியில் செல்போன் மற்றும் லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அவர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

இன்று காலை சென்று பார்த்த போது கடையில் இருந்த 10 ஆன்டிராய்டு செல்போன்கள், லேப்டாப், பழைய போன்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனால் இரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த  காட்சிகளை பார்வையிட்ட போது 2 மர்ம நபர்கள் அதிகாலை 2.30 மணியளவில் கடைக்குள் புகுந்து செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

மேலும் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் போலீசில் சிக்காமல் இருக்க கேமரா ஹார்டு டிஸ்க்கையும் கழற்றி சென்றுள்ளனர். ஆனால் ஒரு பகுதி டிஸ்க்கை விட்டு சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இதுகுறித்து ருத்ரமூர்த்தி பல்லடம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், சி.சி.டி.வி.கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும்  கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News