செய்திகள்
பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை லடாக் பயணம்

Published On 2019-08-28 12:36 GMT   |   Update On 2019-08-28 12:36 GMT
யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கு பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள லடாக் பகுதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (வியாழக்கிழமை) செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, லடாக் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக மத்திய பாதுகாப்பு மந்திரி லடாக் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News