செய்திகள்
பாஜக

தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்- சுதாகர் ரெட்டி பேச்சு

Published On 2021-01-17 05:32 GMT   |   Update On 2021-01-17 05:32 GMT
தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க தொடங்கிவிட்டனர் என்று மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் தணிகைவேல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து உலக நாடுகள் நடுங்குகின்றன. பா.ஜ.க. நடத்திய வேல் யாத்திரைக்கு பின்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கலக்கமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை சிவ தலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அயராது பாடுபட வேண்டும். தமிழக மக்கள் இன்றைக்கு பாரதிய ஜனதாவை ஆதரிக்க தொடங்கிவிட்டனர்.

இப்போது பாரதிய ஜனதா கட்சியின் அலை நாடு முழுதும் வீசிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு திட்டங்களை நீங்கள் முனைப்போடு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதிக கோவில்கள் நிறைந்த சிறப்புமிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு நாயன்மார்கள், கட்டபொம்மன், கொடிகாத்தகுமரன் போன்ற நல்லோர்கள் பிறந்துள்ளனர்.

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியை மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கி உள்ளது.

ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. எனவே தமிழகத்தின் மீது அக்கறை உள்ள அரசாக பாரதிய ஜனதா கட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றியடைய நீங்கள் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News