செய்திகள்
வைகோ

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ மீண்டும் பிரசார பயணம்

Published On 2019-08-17 06:36 GMT   |   Update On 2019-08-17 06:36 GMT
நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம் மேற்கொள்கின்றார்.
சென்னை:

ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்டத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் மற்றும் நீர் நிலைகளை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம் மேற்கொள்கின்றார்.

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, பொன்னையன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர ராஜன், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். பிரசாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் மேற்கொண்டு வருகிறார்.

20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆண்டிப்பட்டி- மாலை 3.30, எஸ்.எஸ்.புரம்- மாலை 4.00, எஸ்.ரெங்கநாத புரம்-மாலை 4.30, நாச்சியார்புரம்-மாலை 5.00, ரெங்கசமுத்திரம்- மாலை 5.30, ஜெயமங்கலம்-மாலை 6.00, மேல்மங்கலம்-மாலை 6.30, வடுகபட்டி-இரவு 7.00, பெரியகுளம்-இரவு 7.30, லட்சுமிபுரம்-இரவு 8.00, வடபுதுப்பட்டி-இரவு 8.30, அல்லிநகரம்-தேனி-இரவு 9.00.

21-ந்தேதி (புதன்கிழமை) அரண்மனைப்புதூர்-மாலை 3.30, கொடுவிலார்பட்டி- மாலை 4.00, நாகலாபுரம்- மாலை 4.30, ஸ்ரீரெங்கபுரம்- மாலை 5.00, வெங்கடாசல புரம்-மாலை 5.30, காமாட்சிபுரம்-மாலை 6.30, சீப்பாலக்கோட்டை- இரவு 7.00, சின்னமனூர்- இரவு 7.30, மார்க்கையன்கோட்டை- இரவு 8.00, குச்சனுர்-இரவு 8.30, பாலார்பட்டி- இரவு 9.00, குண்டல்நாயக்கன்பட்டி- இரவு 9.10, உப்புக்கோட்டை- இரவு 9.30.

22-ந்தேதி (வியாழக்கிழமை) போடிநாயக்கனூர்-மாலை 3.30, சில்லமரத்துப்பட்டி-மாலை 4.00, ராசிங்காபுரம்-மாலை 4.30, திம்மி நாயக்கன்பட்டி- மாலை 5.00, புதுக்கோட்டை (பொட்டிப்புரம்)-மாலை 5.30, தேவாரம்-மாலை 6.00, பண்ணைப்புரம்-மாலை 6.30, கோம்பை-இரவு 7.00, உத்தமபாளையம்-இரவு 7.30, கம்பம்-இரவு 8.30, கூடலூர்-இரவு 9.00.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் இருந்து 10 நாள் கம்பத்துக்கு நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News