பெண்கள் மருத்துவம்
கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படும் கிராமத்து பெண்கள்

கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படும் கிராமத்து பெண்கள்

Published On 2022-04-27 08:40 GMT   |   Update On 2022-04-27 08:40 GMT
கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று கால்சியம். பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதிக்கும், ரத்தம் உறைவதற்கும், இதயத் தசைகள் சீராக சுருங்கி விரிவதற்கும், நரம்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் கால்சியம் முக்கியமானது.

ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பெண்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் வாழும் பெண்களிடையே, கால்சியம் குறைபாட்டால் வரும் நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன.

கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

இதனால் உடல் சோர்வு, எலும்புகள் வலுவிழத்தல் மற்றும் உடைதல், தசைப்பிடிப்பு, சருமம் மற்றும் நகங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள், பற்கள் பாதிப்பு, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள், முளைவிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் போன்றவர்களுக்கு, சராசரி தேவையை விட அதிகமாக கால்சியம் தேவைப்படும்.
Tags:    

Similar News