செய்திகள்
கோப்புபடம்

வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது - 250 லிட்டர் ஊறல் அழிப்பு

Published On 2021-06-10 17:00 GMT   |   Update On 2021-06-10 17:00 GMT
வேதாரண்யம் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை கைது செய்தனர். 250 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாசேகர் மற்றும் போலீசார் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாரண்யம் அருகே உப்பனாறு பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கொள்ளுதீவு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது48), ராஜேந்திரன் (38), வெற்றிச்செல்வன் (30) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் மற்றும் நிலத்துக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றினர்.

இவற்றை போலீசார் அங்ேகயே அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய தளவாட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

Similar News