உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் வாரிசு நியமனத்தை சமர்ப்பிக்க வேண்டும்

Published On 2022-05-05 07:18 GMT   |   Update On 2022-05-05 07:18 GMT
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் வாரிசு நியமனத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மண்டல ஆணையர் தகவல்
நாகர்கோவில்:

நாகர்கோவில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் ரவுஷன் கஷ்யப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் யூ.ஏ.என். எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கடந்த 1.6.2021-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனர்களின் கோரிக்கை தொடர்ந்து இதற்கான கால வரம்பு 31.3.2022 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. 

கால அவகாசம் மேலும் நீட்டிக்காத காரணத்தினால் யூ.ஏ.என். எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும் வைப்பு நிதி உறுப் பினர்களுக்கு மட்டுமே வைப்பு நிதி சந்தாவை கடந்த மார்ச் மாதம் இ.சி.ஆர். மூலம் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.எனவே, இதுவரை ஆதார் எண் இணைக்கப்படாத உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக யூ.ஏ.என். எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் உறுப்பினர் கள் அவர்களது வாரிசு நியமனம் சமர்ப்பிப்பதற் கான வசதிகள் ஒருங்கி ணைந்த உறுப்பினர் இணைய முகப்பில் கொடுக் கப்பட்டுள்ளது. இணைய தளத்தில் சென்று இ-நாமி னேஷன் தாக்கல் செய்தால் மட்டுமே ஓய்வூதியம் பெறுவ தற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். 

எனவே, உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த விவரத்தை தெரியப்படுத்தி உடனடியாக வருங்கால வைப்புநிதியின் தடையற்ற சேவைகளை தொழிலாளர் கள் உடனுக்குடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் வைப்புநிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News