செய்திகள்
கோப்புபடம்

பாலிதீன் பயன்பாடு - அபராதம் விதிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முடிவு

Published On 2021-10-12 05:15 GMT   |   Update On 2021-10-12 05:15 GMT
வரும் வாரம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவிநாசி:

அவிநாசி அருகேயுள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகமும், அதன் தொடர்ச்சியாக அவிநாசி பேரூராட்சி நிர்வாகமும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் விற்க தடை விதித்தன.

கடந்த 7-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கியிருந்தன. இதையடுத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி கூறுகையில்:

பாலிதீன் பை உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பாலிதீன் வகைகளை விற்கக்கூடாது என கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். கடைக்காரர்களும் பாலிதீன் விற்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். வரும் நாட்களில் பாலிதீன் பயன்பாடு குறித்து கண்காணிக்க உள்ளோம் என்றார்.

அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்:

பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் வாரம்  கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கும் என்றனர்.
Tags:    

Similar News