செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோட்டில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா மொத்த பாதிப்பு

Published On 2021-09-14 05:47 GMT   |   Update On 2021-09-14 05:47 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,269 பேர் பல்வேறு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 224 வரைதான் சென்றது. ஆனால் 2-ம் அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1,784 வரை சென்றது. அதன்பிறகு தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேல் தினசரி பாதிப்பு இருந்து வந்தது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 100 என்ற அளவில் வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 99 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது. இன்று இரவுக்குள் 1 லட்சத்தை கடந்து விடும்.

இதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 121 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 665 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1,269 பேர் பல்வேறு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி உள்ளதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News