செய்திகள்
வாட்ஸ்அப்

மக்களின் பிரைவசியை காப்பது நமது கடமை -வாட்ஸ்அப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

Published On 2021-02-15 07:18 GMT   |   Update On 2021-02-15 07:18 GMT
புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

வாட்ஸ்அப் செயலி சமீபத்தில் வெளியிட்ட புதிய தனியுரிமை கொள்கைக்கு (பிரைவசி பாலிசி) எதிராக டெல்லியைச் சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியுரிமை கொள்கை தொடர்பாக நீதிபதிகள் தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர், அவர்களின் நலன்களை காப்பது நமது கடமை என்று நீதிபதிகள் கூறினர். 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக வாட்ஸ்அப் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, ஐரோப்பிய நாடுகளைப் போன்று இந்தியாவும் பிரைவசிக்கென சிறப்பு சட்டம் கொண்டு வந்தால் பின்பற்றத் தயார் என்று வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News