ஆன்மிகம்
சுவாமிமலை முருகப்பெருமான்

இந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை

Published On 2019-10-15 03:07 GMT   |   Update On 2019-10-15 03:07 GMT
அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
15-ந்தேதி (செவ்வாய்) :

* திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (புதன்) :

* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.
* கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா.
* தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம் கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (வியாழன்) :

* சங்கடஹர சதுர்த்தி.
* கார்த்திகை விரதம்.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* தென்காசி உலகம்மை திருவீதி உலா.
* திருத்தணி, சுவாமிமலை ஆகிய தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* இன்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.

18-ந் தேதி (வெள்ளி) :

* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் உலா.
* அனைத்து சிவன் கோவில்களிலும் விஷூ தீர்த்தம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
* கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருவீதி உலா.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

19-ந் தேதி (சனி) :


* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை விருட்ச வாகனத்திலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.
* தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு அபிஷேக ஆராதனை.
* இன்று கருட தரிசனம் செய்வது நன்று.
* சமநோக்கு நாள்.

20-ந் தேதி (ஞாயிறு) :

* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* தென்காசி உலகம்மை பவனி வருதல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜசோழன் 1034-வது பிறந்தநாள்.
* மேல்நோக்கு நாள்.

21-ந் தேதி (திங்கள்) :

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் பவனி வருதல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
Tags:    

Similar News