செய்திகள்
ஜோதிபிரியா மாலிக்

எம்.எல்.ஏ.-க்கள் மீண்டும் எங்களுடன் இணைவதற்கு வரிசையில் நிற்கிறார்கள்: மம்தா கட்சி மந்திரி சொல்கிறார்

Published On 2021-01-12 14:08 GMT   |   Update On 2021-01-12 14:08 GMT
தேர்தலுக்கு முன் மே மாதம் முதல் வாரத்தில் ஆறு முதல் ஏழு எம்.பி.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள் என்று, அக்கட்சியின் மந்திரி ஜோதிபிரியா மாலிக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்காளத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பா.ஜனதா இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.

பா.ஜனதா தனது வழக்கமான பாணியில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்களை இழுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரியை இழுத்தது. மேலும் சில எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு கட்சி மாறினர்.

இந்த நிலையில் பங்குரா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட துஷார் பாபு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். நேற்று அவர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில மந்திரி ஜோதிபிரியா மாலிக் கூறுகையில் ‘‘தேர்தலுக்கு முன்னதாக மே மாதம் முதல் வாரத்திற்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஆறு முதல் ஏழு எம்.பி.க்கள் உடனடியாக இணைவார்கள்.

எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்கள் கூட மீண்டும் கட்சியில் இணைய வரிசையில் நிற்கிறார்கள். துஷார் பாபு எம்.எல்.ஏ. நேற்று மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்’’ என்றார்.
Tags:    

Similar News