செய்திகள்
நரேந்திர மோடி - அமித்ஷா

யாரிடம் இருந்தும் இந்துத்துவா சான்றிதழை பெற வேண்டிய அவசியம் இல்லை - பாஜக மீது சிவசேனா தாக்கு

Published On 2020-11-17 07:26 GMT   |   Update On 2020-11-17 07:26 GMT
எங்கள் இந்துத்துவா சான்றிதழை எந்த கட்சியிடம் இருந்தும் பெற வேண்டிய அவசியம் இல்லை என பாஜக-வை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மூலம் உத்தவ் தாக்கரே முதல்மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
 
காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அமைத்ததில் இருந்தே சிவசேனா மீதும் அதன் தலைவர் உத்தவ் தாக்கரே மீதும் பாஜக கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறது. பாஜகவின் விமர்சனங்களுக்கு சிவசேனா தக்கபதிலடி கொடுத்து வருகிறது.



இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பாஜக-வை இன்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் பேசியதாவது:-

எங்கள் இந்துத்துவா சான்றிதழை எந்த கட்சியிடம் இருந்தும் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்போதும், இப்போதும், எப்போதும் நாங்கள் இந்துத்துவாவாதிகள் தான். 

இந்துத்துவாவை வைத்து அவர்களை போன்று (பாஜக) நாங்கள் அரசியல் செய்வது இல்லை. நாட்டுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் முன்வந்து இந்துத்துவா என்னும் வாளை சிவசேனா வீசும்.

என்றார். 
Tags:    

Similar News