அழகுக் குறிப்புகள்
மாம்பழ பேஸ் பேக்

சரும அழகை மேம்படுத்தும் மாம்பழ பேஸ் பேக்

Published On 2022-04-13 06:26 GMT   |   Update On 2022-04-13 06:26 GMT
மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இப்போது மாம்பழ பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம்...
மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும். அவர்கள் சரும அழகை சீராக்குவதற்கு மாம்பழத்தை கூழாக தயாரித்து பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

மாம்பழக் கூழுடன் கடலை மாவு, தேன், அரைத்த பாதாம் சேர்த்தும் பயன்படுத் தலாம். ஒரு பவுலில் மாம் பழக்கூழை கொட்டி அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கூழ் கலவையுடன் பாதாமை அரைத்து சேர்த்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி வரலாம்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழ தோலை உலரவைத்து பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
Tags:    

Similar News