தொழில்நுட்பம்
ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்

10ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸர்... ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்...

Published On 2019-09-04 05:19 GMT   |   Update On 2019-09-04 05:19 GMT
சியோமி நிறுவனத்தின் 10ம் தலைமுறை இன்டெல் ப்ராசஸர் கொண்ட ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.
ரெட்மி நோட் 8, ரெட்மி நோட் 8 புரோ, ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரெட்மி டிவி ஆகியவற்றுடன் ரெட்மி புக் 14 புரோ லேப்டாப்பும்  சந்தைக்கு வந்துள்ளன. 3 வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ரெட்மி புக் 14 புரோ லேப்டாப் 10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர்களை கொண்டுள்ளது.

ப்ராசஸர் மேம்பாட்டை தவிர்ந்து இந்த Pro வகை லேப்டாப், ரெட்மிபுக் 14 போன்றே முழுவதுமாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வகை சில்வர் என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமான நிலையில், இந்த ரெட்மிபுக் 14 புரோ சாம்பல் மற்றும் பின்க் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர்களை கொண்டுள்ள இந்த ரெட்மிபுக் 14 புரோ லேப்டாப் 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த லேப்டாப்பின் முதல் வகை இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸரும், 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. இந்த வகையின் விலை 3,999 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ.40,000 இன்டெல் கோர் i5 ப்ராசஸருடன் 8ஜிபி ரேம், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை லேப்டாப் 4,499 யுவான்கள் (45,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாக உள்ளது.

அதிகபடியாக ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்ட இதன் டாப்-என்ட் வகை 4,999 யுவான்கள் (50,000 ரூபாய்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் செப்டம்பர் 6-ல் தனது முதல் விற்பனை ஆகிறது.



4-இன்ச் திரை கொண்ட இந்த லேப்டாப், 10ம் தலைமுறை iஐ7 ப்ராசஸர், 512ஜிபி சேமிப்பு அளவு கொண்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் எம்.எக்ஸ்250 கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

இந்த லேப்டாப்பில் 46W பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. போர்ட் தேர்வில் இரண்டு யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி  2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும்.

மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும். இந்த லேப்டாப்பில் 46w பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

போர்ட் தேர்வில் இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு USB  2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும். மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும்.

Tags:    

Similar News