ஆட்டோமொபைல்
டொயோட்டா

அடுத்த மாதமும் கார் உற்பத்தியை குறைக்கும் டொயோட்டா

Published On 2021-10-17 04:45 GMT   |   Update On 2021-10-16 11:33 GMT
டொயோட்டா நிறுவனம் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பணிகளை குறைக்கிறது.


டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் தனது சர்வதேச கார் உற்பத்தி பணிகளை 15 சதவீதம் குறைக்கிறது. முன்னதாக நவம்பர் மாதம் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை 8.5 லட்சம் முதல் 9 லட்சம் யூனிட்களாக குறைக்கிறது.

கார் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஜப்பானில் 50 ஆயிரம் யூனிட்கள், வெளிநாட்டு சந்தைகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் வரை குறையும். 



முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் டொயோட்டா கார் உற்பத்தியை மூன்று சதவீதம் வரை குறைத்தது. சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாகவும் கார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News