ஆன்மிகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்

இந்த வார விசேஷங்கள் 16.7.2019 முதல் 22.7.2019 வரை

Published On 2019-07-16 04:08 GMT   |   Update On 2019-07-16 04:08 GMT
ஜூலை மாதம் 16-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
16-ந்தேதி (செவ்வாய்) :

* பவுர்ணமி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* அம்பாசமுத்திரம் கிருஷ்ண சுவாமி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயங்களில் தெப்ப உற்சவம்.
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
* கீழ்நோக்கு நாள்.

17-ந்தேதி (புதன்) :

* தட்சிணாயன புண்யகாலம் தொடக்கம்.
* அனைத்து சிவன் கோவில்களிலும் அயன தீர்த்தம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

18-ந்தேதி (வியாழன்) :

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் பவனி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு கண்டருளல்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

19-ந்தேதி (வெள்ளி) :

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளிய பின், தங்க பல்லக்கில் புறப்பாடு.
* அவிநாசியப்பர் ஆலயத்தில் அம்மனுக்கு விசேஷ வழிபாடு.
* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு கண்டருளல்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

20-ந்தேதி (சனி) :

* சங்கடஹர சதுர்த்தி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.

21-ந்தேதி (ஞாயிறு) :


* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (திங்கள்) :

* சங்கரன்கோவில் சோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* ஏரல் சேர்மன் சுவாமி ஆலயத்தில் ஆடி அமாவாசை உற்சவம் தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.

Tags:    

Similar News