உள்ளூர் செய்திகள்
கோவிலில் முப்பெரும் திருவிழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் முப்பெரும் திருவிழா

Published On 2022-04-15 09:17 GMT   |   Update On 2022-04-15 09:17 GMT
ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் சித்திரை புத்தாண்டு, குரு பெயர்ச்சி, பிரதோஷம் ஆகிய முப்பெரும் திருவிழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் சித்திரை புத்தாண்டு, குரு பெயர்ச்சி, பிரதோஷம் ஆகிய முப்பெரும் திருவிழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. கும்ப பூஜை, குரு பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக தீபாராதனை நடந்தன.

பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வருடப்பிறப்பு தீபாராதனை, திரவிய ஹோமம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.

பிரதோஷ விழாவை முன்னிட்டு மஹாநந்தி அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடந்தன. பின்னர் சுவாமி-அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது.

தொடர்ந்து சிவபுராணம் என்ற தலைப்பில் பேராசிரியர் ஸ்ரீமதி சொற்பொழிவு ஆற்றினார். நிறைவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பக்தஜன சபை நிர்வாகிகள் பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தங்கமணி, மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜை நிகழ்வுகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.
Tags:    

Similar News