உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

மாரியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-05-05 07:54 GMT   |   Update On 2022-05-05 07:54 GMT
திருமருகல் அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடை பெறுவது வழக்கம்.அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி காப்புகட்டி துவங்கப்பட்டது.திருவிழா வில் நேற்று முதல்நாள் காவடி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளானபக்தர்கள் பால் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்றுநடை பெற்றது. இதில் மூன்று தேர்கள் வீதி உலா,எல்லை சுற்றுதல், தேர் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா மற்றும் மூன்று தேர்கள் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. இந்த திருவிழா வரும் மே 6-ம் தேதி முடிவடைகிறது. ஏற்பா டுகளை அகரக்கொந்தகை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News