ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா நாளை நடக்கிறது

Published On 2021-03-16 08:04 GMT   |   Update On 2021-03-16 08:04 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா வலியபடுக்கை பூஜையுடன் நடைபெற உள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9 - ந்தேதி வரை பத்து நாட்கள் நடந்தது.

இந்த விழாவின் எட்டாம் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணி முதல் பூமாலை சடங்குகள், 8 மணிக்கு வில்லுப்பாட்டு, மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மற்றும் இரவு 8.30 மணிக்கு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) மீன பரணிக்கொடை விழா வலியபடுக்கை பூஜையுடன் நடைபெற உள்ளது.

வலியபடுக்கை பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. பங்குனி மாத பரணியை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு உருள் நேர்ச்சை, காலை 9.30 மணி மற்றும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருகை, பகல் 11 மணிக்கு பருத்திவிளையில் இருந்து சந்தனகுடம் பவனி, 12 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
Tags:    

Similar News