செய்திகள்
கேஎஸ் பரத்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: சகாவிற்கு மாற்று வீரராக கே.எஸ். பரத் அணியில் சேர்ப்பு

Published On 2021-05-20 10:26 GMT   |   Update On 2021-05-20 10:26 GMT
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த ஆறு போட்டிகளுக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக விருத்திமான் சகா இடம் பிடித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியின்போது சகாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போதுதான் அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் ஒருவேளை சகா தயாராக முடியவில்லை என்றால், அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

27 வயதாகும் கே.எஸ். பாரத் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். உள்ளூர் தொடரான முதல்-தர கிரிக்கெட்டில் அதிக வருடம் விளையாடிய அனுபவம் பெற்றவர். இதுவரை 78 போட்டிகளில் விளையாடி 4283 ரன்க்ள அடித்துள்ளார். 123 இன்னிங்சில் 9 சதங்கள், 23 அரைசதங்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும்.



கேரளாவிற்கு எதிராக 2012-13-ல் தனது 19 வயதில் கேரளாவிற்கு எதிராக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2015-ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.
Tags:    

Similar News